தையில் தொடரும் பனி பொலிவு... சருமத்தை எப்படி பாத்துக்கலாம்?
பனிக்காலத்தில் சருமம் எப்படி இருந்தாலும், வறட்சி, தோலில் அரிப்பு, வெடிப்பு போன்ற பாதிப்புக்கு உள்ளாகவே செய்யும்.
தைபிறந்தும் பனி தொடர்வதால் சருமத்தை பராமரிக்க கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும்.
பாலாடையுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து முகம், கை, கால்களில் தேய்த்து ஊற வைத்து குளித்தால் வறண்ட சருமம் பொலிவு பெறும்.
பனிக்காலத்தில் உடலுக்கு கடலை மாவு, பயத்தம் மாவு தேய்த்துக் குளிக்கக்கூடாது. அது சருமத்தில் இருக்கும் எண்ணெய் பசையையும் உறிஞ்சிவிடும்.
ஆலிவ் ஆயில் கை, கால், முகத்துக்கு தடவினால் நாள் முழுக்க சருமத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்கலாம்.
பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கொழுப்புகள் நிறைந்த சமச்சீர் உணவை தினமும் எடுத்து கொள்ள வேண்டும்.
சருமத்தை நீரேற்றமாக வைத்துக்கொள்ள தினமும் போதுமானளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.