நீரின்றி அமையாது உலகு... உலக தண்ணீர் தினம் இன்று !
அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ தண்ணீர் அவசியம். இது இயற்கை வளங்களில் ஒன்று.
தண்ணீரை சேமித்தல், பாதுகாப்பான தண்ணீர் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 1993 முதல் மார்ச் 22ல் உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
உலகில் மூன்றில் ஒருவர் பாதுகாப்பற்ற குடிநீரை பருகுகிறார். தண்ணீரை மிக சிக்கனமாக செலவழிக்க வேண்டும். அப்போது தான் எதிர்கால சந்ததியினருக்கு தண்ணீர் இருக்கும்.
வரும் 2040ல் மின்சார தேவை 25 சதவீதம் அதிகரிக்கும். இதனால் தண்ணீரின் தேவையும் 50 சதவீதம் அதிகரிக்கும்.
உலகில் 74 கோடி பேர் அத்தியாவசிய தேவைக்கான தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். போர்களில் இறப்பவர்களை விட பாதுகாப்பான குடிநீர் கிடைக்காமல் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.
'பனிப்பாறை பாதுகாப்பு' என்பது இந்தாண்டின் மையக்கருத்து.
உலகில் பனிப்பாறை உருகுவது அதிகரித்து வருவதால், வெப்பமயமாதல், குடிநீர் பற்றாக்குறை உள்ளிட்ட ஆபத்து உருவாகிறது. வெள்ளம், கடல் நீர்மட்ட உயர்வுக்கும் காரணமாகிறது.
பூமியின் 70 சதவீத நன்னீர் பனிப்பாறையை சார்ந்தே உள்ளது.