வாய் துர்நாற்றத்தை எவ்வாறு சரிசெய்வது?

உணவுத் துகள் வாயில் தங்கிவிட்டால் அவை பாக்டீரியாக்களைச் சேகரித்து வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

தொடர்ச்சியான வாய் துர்நாற்றம் அல்லது வாயில் கெட்ட சுவை இருந்தால் அது ஈறு நோயின் எச்சரிக்கைக்கான அறிகுறியாக இருக்கலாம்.

நமது உடலில் உமிழ்நீர் இயற்கையாகவே உணவைச் சிதைக்கிறது.

வாயில் போதுமான அளவு உமிழ்நீர் இல்லாதபோது உணவுத் துகள் தேங்கி வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

சைனஸ் மற்றும் நுரையீரல் தொற்று, சிறுநீரக, கல்லீரல் நோய் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

வாய் கொப்பளிக்கும் திரவமும் சூயிங்கமும் வாய் துர்நாற்றத்திற்கு குறுகிய காலத் தீர்வுகளாக இருக்கும்.

இருந்தாலும், வாய் துர்நாற்றத்தைத் தொடர்ந்து தவிர்ப்பதற்கான வழி ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும்.

பிரச்னை உள்ளவர்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது பல் டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.