கத்ரீனா கைப் முதல் மவுனி ராய் வரை : இணையத்தை கலக்கும் ஐஸ் வாட்டர் டங்கிங்!

ஐஸ் வாட்டர் டங்கிங் என்பது ஐஸ் கட்டித் தண்ணீரில் முகத்தை மூழ்கச் செய்தல் முறையாகும்.

இந்தி பிரபலங்கள் கத்ரீனா கைஃப், கிருத்தி சனோன், ஆலியா பட், மவுனி ராய் ஆகியோர் இந்த ஐஸ் வாட்டர் டங்கிங் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு அகண்ட பாத்திரத்தில் ஐஸ் கட்டிகள், குளிர்ந்த நீரை சேர்த்து அதில் முகத்தை முக்கி எடுக்கும் இந்த முறை தற்போது இளசுகளிடமும் பிரபலமாகி வருகிறது.

இதை ஐஸ் வாட்டர் பேஷியல் எனவும் கூறுகின்றனர். காரணம் இதை செய்த உடன் முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். மேலும் முகதிற்கு இளம் ரோஸ் நிறம் கிடைக்கும்.

மேலும் நல்ல ரத்த ஓட்டம் முகத்திற்கு ஆக்ஸிஜன் ஓட்டத்தை கொடுக்கும்.

கண்களை சுற்றி காணப்படும் வீக்கம் மற்றும் முக வீக்கத்தை குறைக்க செய்யும். முகத்தில் உள்ள சிறு துளைகளை இருக்கமாக்கி சுறுகத்தை குறைக்க உதவும்.

முகத்தில் உள்ள நஞ்சுகள் நீக்குவதுடன் தேவையற்ற திரவங்களை வெளியேற்றும். இதனால் புத்துணர்ச்சியான தோற்றம் கிடைக்கும் என கூறுகின்றனர்.