இன்று இந்திய குழந்தைகள் தினம்! நம்பிக்கை அளிக்கும் நேருவின் பொன்மொழிகள்!

இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பிறந்த தினமான நவ.14, தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

ஒரு நாட்டின் வளர்ச்சி, சமூக முன்னேற்றத்துக்கு அடித்தளமாக விளங்குவது குழந்தைகள். - நேரு

உண்மையான நம்பிக்கை மட்டும் ஒருவனுக்கு இருக்குமாயின் அந்த நம்பிக்கை மலைகளைக்கூட அசைத்துவிடும்.

கோழைத்தனம் என்பது அனைத்தையும் பாழாக்கும். வீரமே, அனைத்தையும் வெல்லும்.

தோல்வி ஏற்படுவது அடுத்த காரியத்தைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

செயலுக்கு முன்பே விளைவுகள் பற்றி எண்ணி அஞ்சுகின்ற கோழைக்கு வெற்றி என்பது வெகுதூரம்.

சொல்லும் செயலும் பொருந்தி வாழ்கின்ற மனிதனே உலகத்தில் மகிழ்ச்சியாக வாழ்கின்ற மனிதன்.

ஒன்றை அடைவதற்கு தேவை நல்ல குணம், ஒழுக்கம், ஒருமித்த செயல், எதற்கும் தயாராக இருத்தல்.