பச்சிளம் குழந்தையின் துளி ரத்தத்தில் மன வளர்ச்சி குறைபாட்டை அறியலாம் !

இந்தியாவில் ஆண்டுதோறும் 2,700 குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய நிலையில் பிறக்கின்றன என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதில், வளர்சிதை நோய் குறைபாட்டுடன், 1,900க்கும் அதிகமாக குழந்தைகள் பிறக்கின்றன.

இதை தடுக்க, குழந்தை பிறந்த ஓரிரு நாட்களில், குதிகாலிலிருந்து ஒரு சொட்டு ரத்தம் எடுத்து, அதை உறைய வைத்து ஆய்வு செய்வதன் வாயிலாக குணப்படுத்தலாம்.

பல வளர்சிதைவு மாற்ற குறைபாடுகளை ஆரம்ப நிலையில் கண்டறிந்து, சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும்.

இதில், 55 வகையான குறைபாடுகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கலாம்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு குழந்தை பிறந்தால் கூட, மூன்று சொட்டு ரத்தம் குதிகாலிலிருந்து எடுத்து, பிரத்யேக காகிதத்தில் ஒட்டி காய வைத்து, ஆய்வுக்கூடத்தில் சோதனை செய்யலாம்.

அப்போது, மூளை வளர்ச்சி குறைபாடை கண்டறிந்து, அக்குழந்தையை குணமாக்க முடியும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.