குடல் புழுக்கள் இருக்கா? அறிகுறிகள் வைத்து அறிந்து கொள்ளலாம்...
வயிற்று புழுக்களை அவ்வப்போது உடலில் இருந்து வெளியேற்ற வேண்டும். இல்லை என்றால் பல உபாதைகளை நமக்கு அளித்துக் கொண்டே இருக்கும்.
முதலில் ஒருவர் தங்களில் உடலில் புழுக்கள் இருந்தால் தென்படும் அறிகுறிகள் என்னவென்று தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம்.
நாள்பட்ட செரிமான பிரச்னைகள் இருக்கும். மேலும் வாயுத் தொல்லை, குமட்டல், வயிற்று உப்புசம், மலச்சிக்கல், வயிற்றில் ஒருவித எரிச்சலுடன் இருக்கும்.
புழுக்கள் சிறு குடலின் மேல் வாழ்ந்து, எரிச்சல், அழற்சி மற்றும் வலியை உண்டாக்கும். குறிப்பாக அடிவயிற்று வலி ஏற்படும்.
உடலில் புழுக்கள் அதிகமாக இருக்கும் நேரத்தில், மன இறுக்கம், மன நிலையில் ஏற்றத்தாழ்வு போன்றவை ஏற்படும்.
அவை உடலின் சத்துக்களை உறிஞ்சி, ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஏற்படுத்தும். அதனால் சோர்வாகவும், பலவீனமாகவும் காணப்படுவீர்கள்.
உடலில் வைட்டமின்கள், இரும்புச்சத்து குறைபாட்டை உண்டாக்கும். இதனால் ரத்த சோகை ஏற்படும்.
பசியின்மை இருந்தாலும், உடல் எடை குறைய ஆரம்பித்தாலும், வயிற்றில் புழுக்கள் உள்ளது என்று அர்த்தம்.
சருமத்தில் அரிப்புகள், எரிச்சல் போன்ற பல அலர்ஜிகள் ஏற்படும்.
ஆசனவாயில் அரிப்பு, குடைச்சல் அல்லது எரிச்சல் உண்டாகும். குறிப்பாக இம்மாதிரியான அரிப்பு இரவில் ஏற்படும்