அறிகுறி இல்லாத கர்ப்பம் ஆபத்தானதா?
காலை நேர பலவீனம், நெஞ்செரிச்சல், பசியின்மை மற்றும் மார்பக மென்மை ஆகியவை கர்ப்பத்தின் பொதுவான அறிகுறிகளாகும். அதேவேளையில் ஒவ்வொருவருக்கும் அறிகுறிகள் மாறுபடக்கூடும்.
கர்ப்பத்தின் அறிகுறிகள் நபருக்கு நபர் வேறுபடுவது போன்று, அறிகுறிகளின் கால அளவும் மாறுபடும். நாட்கள் செல்ல செல்ல, உடல் மாறும் போது அறிகுறிகளும் அடிக்கடி மாறும்.
சிலர் மலச்சிக்கல் அல்லது மனநிலை மாற்றங்களை அனுபவிப்பர். பின், எந்த அறிகுறிகளையும் உணராமலிருக்க வாய்ப்புள்ளது. இது ஆரோக்கியமற்றது, கருச்சிதைவுக்கு வழிவகுக்குமோ என கவலையடைவர்.
கர்ப்ப காலத்தில் எந்த அறிகுறிகளும் இல்லாவிட்டாலும், கவலைப்பட வேண்டியதில்லை. இது பொதுவானது தான். அறிகுறிகள் இல்லாமல் கர்ப்பம் தரிக்க வாய்ப்புள்ளது. உடல் நிலை, உணவுமுறை இதற்கு காரணமாகும்.
சிலருக்கு அறிகுறிகள் கூடுதலாகவும், சிலருக்கும் குறைவாகவும் இருக்கும். ஒரு சிலருக்கு முதல் 3 மாதங்களுக்கு மட்டுமே இருக்கும். சிலருக்கு கர்ப்பகாலம் முழுதும் இருக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
ஆனால் முதல் 3 மாதங்களுக்கு பிறகு அடுத்த 3 மாதங்களில் அறிகுறிகள் குறையக்கூடும். கர்ப்ப காலத்தின் போது அறிகுறிகள் இல்லாத பெண்களுக்கு அதிகமாக பசி உணர்வு ஏற்படும்.
கருவுற்ற பெண்களுக்கு முதல் 3 மாதங்கள் எந்த ஒரு அறிகுறியும் தோன்றாது. அறிகுறிகள் இல்லை என்று சொல்லும் பெண்களுக்கு 3 மாதங்களுக்கு பிறகு அறிகுறிகள் தோன்றலாம். எனவே, கவலைப்பட தேவையில்லை.
உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தினால் தான் அறிகுறிகள் உண்டாகின்றன. கர்ப்பாக இருந்து 3 மாதங்களுக்கு மேல் எந்த ஒரு அறிகுறிகளும் தோன்றவில்லை என்றால் டாக்டரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தின் போது சில அறிகுறிகள் குறையும். சில நேரங்களில் வயிற்றிலுள்ள குழந்தை அமைதியாக இருக்கும் அது இயல்பானது தான். ஆனால் திடீரென்று அசைவதை நிறுத்தினால் பிரச்னைக்கான அறிகுறியாக இருக்கலாம்.
குழந்தை அதிகமாக நகராவிட்டாலோ அல்லது குறைவாக நகர்வது போல் தெரிந்தாலோ உடனடியாக டாக்டரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.
ரத்தப்போக்கு, தசைப்பிடிப்பு போன்ற கருச்சிதைவுக்கான வழக்கமான ஆரம்ப அறிகுறிகள் இல்லாமல் கூட, திடீரென நிறுத்தப்படும் கர்ப்ப அறிகுறிகள் கருச்சிதைவுக்கு வழிவகுக்க வாய்ப்புள்ளது.