கொளுத்தும் வெயிலுக்கு கூலான பிரிட்ஜ் நீரை குடிப்பது ஆபத்தா?
பிரிட்ஜிலிருந்து நேரடியாக குளிர்ந்த நீரை குடிப்பதால் உடல்நலனில் பாதிப்பு ஏற்படும்.
குளிர்ந்த நீர் செரிமானத்தை மெதுவாக்கி மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்னைகளை உருவாக்கும்.
அதிக வெயிலில் இருந்து வந்தவுடன் குளிர்ந்த நீரை குடிப்பதால் தொண்டை வலி, சளி, சைனஸ் உள்ளிட்டவை வரும்.
குளிர்ந்த நீரை வேகமாக குடிக்கும்போது தலைவலி ஏற்படலாம்.
அதற்கு பதிலாக மண்பானையில் உள்ள தண்ணீரை பருகினால் உடலுக்கு குளிர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் அளிக்கும்.
அதேபோல் பிரிட்ஜில் வைத்த எந்த உணவுப்பொருளையும் உடனே எடுத்து சாப்பிடக் கூடாது. அதிலுள்ள குளிர்தன்மை சென்ற பின் சாப்பிடுவது நல்லது.