குழந்தைகள் அடிக்கடி கண்ணை சிமிட்டினால் பிரச்னையா?

குழந்தைகள் அடிக்கடி கண்ணை சிமிட்டும்போது வலி இருப்பதாக உணர்ந்தால், கண் சார்ந்த நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம் என, டாக்டர்கள் தெரிவித்தனர்.

மொபைல் போன் பயன்பட்டால், அதிக ஒளியை நீண்டநேரம் கண்கள் பார்ப்பதால், சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு ஏற்படுகிறது.

100ல், 10 குழந்தைகள் கண் கண்ணாடி அணிவதை தற்போது பார்க்க முடிகிறது. ஆனால், சிகிச்சைக்கு மிக தாமதமாகவே எடுப்பதாக கூறப்படுகிறது.

இதிலும், பள்ளிகளில் கரும்பலகையை பார்ப்பதில் சிரமம் ஏற்படும்போது மட்டுமே பாதிப்பு இருப்பதையே கண்டு பிடிக்கின்றனர்.

இதுதவிர, அடிக்கடி கண்களை சிமிட்டும்போது வலி ஏற்படுதல், கண்களை சுருக்கி பார்த்தல், கண்களில் நீர் வறட்சி , சோர்வடைதல் போன்ற அறிகுறிகளும், கண் நோய் இருப்பதை உறுதி செய்கின்றன.

குழந்தைகளுக்கு 20 வயது வரை, கண்கள் முழுமையாக வளர்ச்சி அடையாது. இதனால் ஆண்டுதோறும் கண்களை பரிசோதித்து, பார்வைத்திறன் மாறுபடுவதற்கேற்ப, லென்ஸ் மாற்ற வேண்டும்.