முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க சில டிப்ஸ்...

பப்பாளிப்பழத்தை மிக்சியில் அரைத்து, அத்துடன் முல்தானி மட்டி மற்றும் வேப்பிலைப் பொடி சேர்த்து பசை போல் குழைத்து முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து தண்ணீரில் கழுவ வேண்டும்.

இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்து வந்தால், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் தன்மை குறைந்து, முகம் பளபளப்பாகும்.

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்கிவிடும்.

சோள மாவுடன், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து கழுவலாம்.

வெயிலில் சென்று, வீட்டிற்கு திரும்பியதும், சிறிது தயிர், கடலை மாவு , எலுமிச்சை சாறு கலந்து பூசி, சிறிது நேரம் கழித்து கழுவினால், எண்ணெய் வழிவது குறைந்து, முகம் பளபளப்பாகும்.

1/2 கப் தயிருடன், 1 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவி நன்கு காய வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

ஆப்பிள் பழத்தை தோல் நீக்கி, அதை நன்கு அரைத்து முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.