சூடான சாதத்துடன் குளிர்ச்சியான தயிரை சேர்த்துப் பிசைவது சரியா?
தற்போது பரபரப்பாகவும், அவசர அவசரமாகவும் பள்ளி, அலுவலகம் கிளம்பும் பலருக்கும் பெரும்பாலும் காலை உணவு தயிர்சாதமே.
சூடான சாப்பாட்டில் உப்பு போட்டு, தயிர் ஊற்றிப் பிசைந்து பொரியலுடன் தொட்டு சாப்பிட்டுவிட்டால் வயிறு நிரம்பிவிடும். ஆனால் இவ்வாறு சாப்பிடுவது சரியா?
குக்கரிலிருந்து இறக்கிய சுடுசோற்றுடன் குளிர்ச்சியான மோர், தயிர் கலந்து சாப்பிடுவது உடலுக்கு ஏற்றதா என பலரும் அறிந்திருக்க மாட்டர்.
பிரிட்ஜில் இருந்த எடுக்கப்பட்ட குளிர்ச்சியான தயிரை சுடுசோற்றில் கலப்பது தவறான ஒன்றாகும்.
தயிர், மோரில் அதிகளவு கால்சியம், வைட்டமின் டி, புரதம், நல்ல பாக்டீரியாக்கள் பல உள்ளன. செரிமானக் கோளாறை சரி செய்வதில் தயிர்சாதத்தின் பங்கு மிக முக்கியமானது.
ஆனால் சூடான சோறுடன் தயிரைக் கலக்கும்போது ஏற்படும் ரசாயன மாற்றம் செரிமானத்தை எளிதாக்குவதற்கு பதிலாக கடினமாக்கும். மலம் கழிப்பதில் சிரமம் உண்டாகும்.
எனவே, குக்கரிலிருந்து இறக்கிய சூடான சோற்றை சில நிமிடங்கள் ஆற வைத்து, பின் தயிருடன் சேர்த்துப் பிசைவது நல்லது.
அதேப்போல், பிரிட்ஜில் இருந்து தயிர், பால் உள்ளிட்ட பொருட்களை எடுத்ததும், சில நிமிடங்கள் கழித்து அவை இயல்பு நிலைக்குத் திரும்பியதும் பயன்படுத்த வேண்டும்.