பள்ளி முடித்து வரும் குழந்தைக்கு பாக்கெட் ஸ்நாக்ஸ் தரலாமா?
சமச்சீரான உணவு என்பது, நம் அன்றாட தேவைகளுக்கு ஆற்றலை வழங்கக் கூடியதாகவும், அவசர தேவைகளுக்கு ஆற்றல் சேமிப்பாகவும் இருக்க வேண்டும்.
அப்படி என்றால் அவை மாவுச்சத்து, புரதம், கொழுப்புச் சத்து, வைட்டமின், தாதுக்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு மூன்று வேளை உணவு, இரண்டு - மூன்று முறை, சத்தான சிறுதீனி தருவது, அவர்களுக்கு மகிழ்ச்சியையும், அதேநேரத்தில், உடல் வளர்ச்சிக்கும் உதவும்.
சிறுதீனி என்று பாக்கெட் ஸ்நாக்சாக எதை வேண்டுமானாலும் தரலாமா என்று கேட்டால், கூடாது என குழந்தை நல டாக்டர்கள் கூறுகின்றனர்.
காரணம், பாக்கெட்டுகளில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட திண்பண்டங்களில், உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பல வேதிப்பொருட்கள் உள்ளன.
இவை அதிகம் உண்ண வைக்கும் நோக்கில் அதிக சுவை, மணம், சேர்க்கப்படுகிறது.
வணிகநோக்கத்துடன், குழந்தைகளை கவரக்கூடிய வகையில், வண்ண வண்ண பாக்கெட்டுகளில், பொம்மைகள், கார்ட்டூன் ஸ்டிக்கர்கள் ஒட்டி, விளம்பரங்கள் மூலம் விற்கின்றனர்.
இவை விலை அதிகம் என்பது ஒருபுறம், அவற்றில் சத்துக்கள் இருப்பதில்லை. தேவையற்ற கலோரி தான் உள்ளது.
இந்த மாதிரியான உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பது மிகவும் ஆபத்தானது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.