நீரிழிவு நோய்க்கும், கேன்சருக்கும் தொடர்பு உள்ளதா?

ரத்தத்தில், 1 மில்லி கிராம் குளூக்கோஸ் இருந்தாலே போதும். இது எல்லா நேரத்திலும் இருக்கும். இதை எரிக்கத் தேவையான இன்சுலினை நம் கணையம் சுரக்கும்.

பல சமயங்களில் தேவைக்கு அதிகமாக சாப்பிடுகிறோம். இதனால், ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. அதை எரிக்க கூடுதல் இன்சுலின் தேவைப்படுகிறது.

ஒரு கட்டத்தில் கணையம் அயர்ச்சியாகி, தேவைக்கேற்ற இன்சுலின் சுரப் பதையே நிறுத்தி விடும். ரத்தத்தில் குளூக்கோஸ் அதிகரிக்கும்.

அதிகப்படியாக இருக்கும் குளூக்கோசை, கல்லீரல் கொழுப்பாக மாற்றி, செல்களில் சேமித்து வைக்கும். அதிகமாக கொழுப்பு சேர்ந்த செல்கள் வீங்கி இருக்கும்.

வளர்சிதை மாற்றத்தில் செல்கள் பிரியும் போது, கொழுப்பு சேர்ந்த செல்கள் கட்டுப்பாடில்லாமல் பிரிந்து, கேன்சராக மாறும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

கேன்சர் வராமல் தடுக்க, ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வேண்டியது அவசியம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.