பிரசவத்துக்கு பின் உடல் எடை அதிகரப்பும், சீரற்ற மாதவிடாய்க்கும் தொடர்பு உண்டா?

பிரசவத்திற்கு பின் உடல் எடை அதிகரிப்பதற்கும், முறையற்ற மாதவிடாய் சுழற்சிக்கும் சம்பந்தம் இல்லை என டாக்டர்கள் கூறுகின்றனர்.

பிரசவத்துக்கு பின் ஏற்படும் முறையற்ற மாதவிடாய் சுழற்சி வழக்கமானது. சில மாதங்களில் இப்பிரச்னை தானாகவே சீராகிவிடும் என கூறப்படுகிறது. .

கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் பாலுாட்ட தானியங்கள், முளைகட்டிய பயிர்கள், சத்தான உணவுகள் என பாலுாற துாண்டும் உணவுகள் நிறைய எடுக்க வேண்டும்.

பாலுாட்டும் தாய்மார்களுக்கு பசியும் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக இயற்கையாகவே உடல் எடை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

அந்த காலக்கட்டங்களில் சின்ன சின்ன உடற்பயிற்சிகள், நடைபயிற்சி செய்வதால் உடல் எடையை கட்டுப்படுத்தலாம்.

கார்போ ஹைட்ரேட் உணவுகள் அதிகம் சாப்பிடுவதை தவிர்த்து பழங்கள், காய்கறிகள் சாப்பிடலாம்.

தினமும் 3 முதல் 4 லிட்டர் என்ற அளவில், எடை ஏற்ப நிறைய தண்ணீர் பருக வேண்டும்.

பிரசவத்திற்கு பின் தாய்மார்கள் என்னென்ன உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என டாக்டர்கள் நிச்சயம் பரிந்துரைப்பார். அதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

முறையற்ற மாதவிடாய் ஆண்டுக்கணக்கில் தொடர்கிறது என்றால் நிச்சயம் மகளிர் நோய் டாக்டரிடம் ஒருமுறை கலந்தாலோசிப்பது தீர்வை தரும்.