தமிழகத்தில் வாக்கிங் நிமோனியா இருக்கிறதா, இல்லையா?
தமிழகத்தில், 'வாக்கிங் நிமோனியா' காய்ச்சல் பரவி வருவதாக, அரசு டாக்டர்கள் தெரிவிக்கும் நிலையில், புதிய வகை காய்ச்சல் எதுவும் இல்லை என்கிறது பொது சுகாதாரத் துறை.
வாக்கிங் நிமோனியா என்பது, 'ஏடிபிக்கல் நிமோனியா' எனப்படுகிறது. காய்ச்சலோடு சளியும், இருமலும் இருக்கும்.
இருமலுடன் வெளியேறும் சளி மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் இருக்கும். வயதானவர்களுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தும்.
மைக்கோ பிளாஸ்மா போன்ற பாக்டீரியாவாலும் ஏற்படும். ரத்த பரிசோதனை போன்றவற்றில் கண்டறிய முடியாது. 'சிடி ஸ்கேன்' போன்றவற்றால் மட்டுமே, இவ்வகை பாதிப்பை கண்டறிய முடியும்.
முகக்கவசம், கை கழுவுதல், தனிமனித இடைவெளி போன்றவற்றை பின்பற்றுவதன் வாயிலாக, வாக்கிங் நிமோனியா உட்பட, அனைத்து காய்ச்சல் பாதிப்புகளில் இருந்தும் தற்காத்து கொள்ள முடியும்.
தற்போது, தமிழகத்தில் இருப்பது வழக்கமான காய்ச்சல் பாதிப்புகள் தான், வாக்கிங் நிமோனியா போன்ற பாதிப்புகளை, பொது சுகாதாரத் துறை அங்கீகரிக்கவில்லை.
புதிய பெயர்களை கூறி, பொது மக்களை அச்சுறுத்த வேண்டாம். அதேநேரம், காய்ச்சல் தடுப்புக்கான அனைத்து முன்னேச்சரிகையுடன் இருப்பது அவசியம் என பொது சுகாதாரத் துறை கூறியுள்ளது.