உடற்பயிற்சிக்கு பின் குளிப்பது அவசியமா?

நீண்ட கால ஆயுள், ஆரோக்கியமான உடல்நலனுக்கு உடற்பயிற்சி அவசியம்.

ஆனால் உடற்பயிற்சிக்கு பின் குளிப்பதை தவிர்த்து வந்தால், தோல் பிரச்னைகள் உருவாகும் என டாக்டர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வியர்வை மணமற்றது; ஆனால் தோலில் தங்கும்போது அது பாக்டீரியாவுக்கு உணவாகி நாற்றத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, தீவிர உடற்பயிற்சி செய்த 30 நிமிடங்களுக்குள் குளிப்பது அவசியமானது.

அப்போது, உடற்பயிற்சியால் வெளியேறிய வியர்வை, அழுக்கு, எண்ணெய் உள்ளிட்டவை சரும துளைகளை அடைத்து தோல் வியாதிகள், தோல் எரிச்சல் ஏற்படுத்துவதை தடுக்கலாம்.

எனவே, தீவிர உடற்பயிற்சிக்கு பின் கட்டாயமாக குளிப்பதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்பது டாக்டர்களின் அட்வைஸாகும்.