இன்று உலக புலிகள் தினம்!!
இந்தியா, வங்கதேசம், தாய்லாந்து, சீனா, ரஷ்யா உட்பட 13 நாடுகளில் புலிகள் வாழ்கின்றன.
அழிந்து வரும் புலிகளை பாதுகாக்க கோரி ஜூலை 29ல் உலக புலிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது
இந்தியாவில், 17 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் ஓர் உயிரினம், புலி.
2022 கணக்கின் படி இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 3167 ஆக உள்ளது. இது உலக புலிகளின் எண்ணிக்கையில் 75 சதவீதம்.
இதன் எடை சராசரி, 200 கிலோ, 3.3 மீ., நீளம் இருக்கும். மணிக்கு, 60 கி.மீ., ஓடக்கூடிய விலங்கு.
ஒவ்வொரு மனிதனுக்கும் கைரேகை மாறுபடுவது போல, புலிகளுக்கும் உடலில் உள்ள வரிகள் மாறுபடுவது, இயற்கையின் அதிசயம். இதன் அடிப்படையில் தான் புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
புலிகள் உள்ள, 13 நாடுகளில், ஏழு நாடுகள், 'குளோபல் டைகர் போரம்' எனும் அமைப்பில் இணைந்து, அதை பாதுகாப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. இதன் தலைமையகம் புதுடில்லியில் உள்ளது.
புலிகள், தாவர உண்ணிகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைப்பதால் காடுகளின் பல்லுயிர் பெருக்கத்தை சமநிலைப்படுத்துவது, காடுகளில் உற்பத்தியாகும் நதிகளையும் பாதுகாக்கிறது.