இன்று தேசிய புள்ளியியல் தினம்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 29ல் தேசிய புள்ளியியல் தினம் (National Statistics Day) கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்திய புள்ளியியல் துறைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர் புள்ளியியல் அறிஞர் பிரசந்த சந்திர மகிலனோபிஸ்.

இவர் 1893 ஜூன் 29ல் கோல்கட்டாவில் பிறந்தார்.

இந்திய புள்ளியியல் நிறுவனத்தை இவர் 1931ல் தொடங்கினார்.

இது மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை வடிவமைக்க, கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு ஒரு சிறந்த ஆலோசனை மையமாக திகழ்கிறது.

மகிலனோபிஸ் சாதனையை அங்கீகரிக்கும் விதமாக அவரது பிறந்த தினமான இன்று தேசிய புள்ளியியல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

புள்ளி விபரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இத்தினம் உதவுகிறது.