இந்த சீசனில் சுவைக்க... இதோ காலா கட்டா பாப்சிகல்ஸ் ரெசிபி !

தேவையானப் பொருட்கள்: நாவல் பழம் - அரை கிலோ, சர்க்கரை - அரை கப், எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன், கருப்பு உப்பு, சீரக துாள் - சாட் மசாலா - தலா 1 டீஸ்பூன், தண்ணீர் - 1 கப்.

நாவல் பழங்களின் விதைகளை நீக்கி விட்டு, சதைப்பகுதியை மட்டும் மிக்சியில் போட்டு, நன்றாக அரைக்கவும்.

ஒரு பாத்திரத்தில், அரைத்த நாவல் பழ கூழ், சர்க்கரை, தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 10 - 12 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

கலவை சற்று கெட்டியானதும் கருப்பு உப்பு, சாட் மசாலா, சீரக துாள் சேர்த்து நன்றாக கிளறி, அடுப்பை அணைக்கவும்.

நாவல் பழ சிரப் ஆறியதும், வடி கட்டி, ஐஸ் பாப்சிகல் மோல்டுகளில் ஊற்றி, ஐஸ்கிரீம் குச்சிகளை செருகவும்.

அதை ப்ரீசரில் குறைந்தபட்சம் 6 - 8 மணி நேரம் வரையோ அல்லது இரவு முழுவதும் வைத்திருந்தால், காலா கட்டா பாப்சிகல்ஸ் ரெடி.

புளிப்பு, காரம், இனிப்பு கலந்து மாறுபட்ட சுவையுடன் கூடிய இந்த காலா கட்டா பாப்சிகல்ஸ் வெயிலுக்கு இதமாக இருக்குமென்பதால், குட்டீஸ்கள் விரும்பிச் சாப்பிடுவர்.