இட்லி, தோசைக்கு... ஆந்திரா ஸ்பெஷல் கோவைக்காய் சட்னி !
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, நறுக்கிய கோவைக்காய், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். கோவைக்காய் நிறம் பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும்.
பின், கொத்தமல்லி இலை, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து வதக்கி தனியே வைக்கவும்.
கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், பூண்டு, சீரகம், மிளகு சேர்த்து நன்கு வதக்கவும்.
சூடு ஆறிய பின் இவையனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைக்கவும்.
பின், கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலையை தாளித்து அரைத்த விழுதை சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான கோவைக்காய் சட்னி ரெடி.
கோவைக்காயை நன்கு பொன்னிறமாக வறுத்தால் மட்டுமே, சட்னி சுவையாக இருக்கும்.