கவிஞர் கண்ணதாசனின் வாழ்க்கைப் பற்றிய அனுபவ மொழிகள்!

கவிஞரும், பாடலாசிரியருமான கண்ணதாசன் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளையும், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களையும் எழுதியுள்ளார்.

இன்று கவிஞர் கண்ணதாசனின் நினைவு தினம்... அவரின் வாழ்க்கை பற்றிய அனுபவ மொழிகள் இதோ...

வியர்வை துளிகளும், கண்ணீர்த் துளிகளும் உப்பாக இருக்கலாம். ஆனால் அவைதான் வாழ்வை இனிமையாக மாற்றும்.

யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே! ஒருவேளை மாற நினைத்தால் ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டும்.

நடப்பது நடக்கட்டும்; நாளைப் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்துவிடு. நிம்மதியான தூக்கம் வரும்.

அழும்போது தனிமையில் அழு, சிரிக்கும்போது நண்பர்களோடு சிரி. கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள். தனிமையில் சிரித்தால் பைத்தியம் என்பார்கள்.

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல்தோறும் வேதனைகள் இருக்கும், வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை.

காவல் எங்கே பலமாக இருக்கிறதோ, அங்கேதான் தாண்டி குதிக்கும் கால்களும் உறுதியாக இருக்கும்.

தேவைக்கு மேலே பொருளும் திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால், பார்வையில் படுவதெல்லாம் சாதாரணமாகத்தான் தோன்றும்.

இரண்டு பக்கமும் கூர்மையுள்ள கத்தியை ஜாக்கிரதையாக கையாள வேண்டும். இதே மாதிரி எந்தப் பக்கமும் சேரக்கூடிய மனிதர்களோடு ஜாக்கிரதையாகப் பழக வேண்டும்.

உனக்கு இவ்வுலகம் சொந்தமில்லை, இவ்வுலகத்திற்கு நீதான் சொந்தம்.