இன்று ரமண மகரிஷி பிறந்த தினம்! அவரின் சிந்தனைகள் சில...
மன அடக்கம் எளிதில் உண்டாகாது. பொறுமையே வெற்றிக்கு அடிப்படை.
நல்ல மனம், கெட்ட மனம் என்று இரண்டு மனம் உலகில் இல்லை. ஒரே மனதில் தான் இருவித பண்புகளும் இருக்கின்றன.
உழன்று கொண்டேயிருக்கும் மனதை தியானம் மூலம் வசப்படுத்த முடியும்.
மற்றவருக்கு நன்மை செய்யத் தொடங்கினால் உள்ளத்தில் அன்பு, கருணை முதலிய நற்பண்புகள் வளரத் தொடங்கும்.
முதலில் உன்னைத் திருத்திக் கொள். அதன் பின் சமுதாய சீர்திருத்தம் தானே நிகழ்வதைக் காண்பாய்.
பிறருக்கு சேவை செய்வதன் மூலம் மனிதன் தனக்குத் தானே உதவி செய்து கொள்கிறான்.
அமைதியும், துாய்மையும் மனதில் இருக்குமானால் செயல் அனைத்தும் நல்லதாகவே இருக்கும்.