வெற்றியை தரும் இடது கை... ஆய்வில் தகவல் !

உலகில் சிலர் இயற்கையாகவே இடது கை பழக்கம் உடையவராக இருப்பர்.

இவர்கள் உலக மக்கள் தொகையில் 10 முதல் 15 சதவீதம் வரையுள்ளனர்.

இந்நிலையில் இவர்கள், வலது கை பழக்கம் உடையவர்களை விட, அதிக போட்டித்தன்மை கொண்டவர்களாக உள்ளனர்.

இவர்களுக்கு போட்டியில் வெல்ல வேண்டும் என்ற விருப்பம் அதிகமாக இருக்குமென, ஜெர்மனியின் மெடிக்கல் ஸ்கூல் ஹம்பர்க் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது.

இவர்கள் குறிப்பாக ஒரு சில விளையாட்டுகளில் முத்திரை பதிக்கின்றனர்.

முந்தைய ஆய்வுகளில் இவர்கள் படைப்பாற்றல், மொழி அறிவில் சிறந்து விளங்குவர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.