உடல் வலியா? எலுமிச்சை, இஞ்சி ரசம் குடிங்க !
தேவையானப் பொருட்கள்: பிஞ்சு இஞ்சி - 25 கிராம், பருப்பு வேக வைத்த தண்ணீர் - 2 டம்ளர், பச்சை மிளகாய் -1, மஞ்சள் துாள் - கால் டீஸ்பூன், சர்க்கரை - ஒரு சிட்டிகை.
கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை - சிறிதளவு, எலுமிச்சை சாறு - அரை பழம், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க... நெய் - 2 டீஸ்பூன், கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், பொடித்த மிளகு - அரை டீஸ்பூன், பெருங்காயம் - கால் டீஸ்பூன், தக்காளி --1.
தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிதளவு நெய் விட்டு சூடானவுடன், அதில் கடுகு, பொடித்த மிளகு, பெருங்காயம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
பின், தக்காளி, இஞ்சி துருவல், உப்பு, மஞ்சள் பொடி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து பிரட்டி பருப்பு தண்ணீரை சேர்க்கவும்.
நுரைகட்டி வரும் போது கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, சர்க்கரை, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து இறக்கவும்; கொதிக்க விடக்கூடாது.
இப்போது, உடல் வலியை போக்கும் எலுமிச்சை இஞ்சி ரசம் ரெடி.