லிப்ஸ்டிக் பிரியர்களே.. உங்க உதடுகள் அடர் நிறமாகக்கூடும்... உஷார்!

பளிச் கலரில் லிப்ஸ்டிக் போடுவது, மேட் லிப்ஸ்டிக் பயன்படுத்துவது, மரபியல் பண்பு, ஒவ்வாமை ஏற்படுத்தும் பற்பசை, லிப்ஸ்டிக்கள் போன்ற பல காரணங்களால் அடர் நிற உதடுகள் உண்டாகின்றன.

அதிகம் வெயிலில் அலைவது,புகைப்பது, நிகோடின் உள்ள புகையிலையை மெல்லுவது, காபி அதிகாக உட்கொள்வது, அடிக்கடி உதட்டை எச்சிலால் ஈரமாக்குவதாலும் உதடுகள் அடர் நிறமாகக்கூடும்.

பகல் நேரத்திலும் பளிச்சிடும் லிப்ஸ்டிக்குகள் மற்றும் மேட் லிப்ஸ்டிக்குகளை தொடர்ந்து பயன்படுத்துவதாலும், இயற்கையான உதட்டின் நிறம் மங்கி கருமையடையும்.

தூங்கும் போது லிப்ஸ்டிக்கை கலைத்துவிட வேண்டும். ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய்யை பஞ்சில் நனைத்து பயன்படுத்த வேண்டும்.

உதடுகளை ஆரோக்கியமாகவும், மென்மையாகவும் மாற்ற தண்ணீர் பயன்படுத்தி கை விரலால் தேய்த்து சுத்தப்படுத்தலாம். சுரண்டுவதோ, உதட்டு தோலை பிய்ப்பதோ கூடாது.

தேய்ப்பதன் மூலம் உதட்டின் இறந்த செல்கள் நீங்கி உதடுகள் மலர்ச்சியடையும். பின் லிப் பாம் பயன்படுத்தலாம்.

தினசரி லிப்ஸ்டிக் பயன்படுத்துபவர் என்றால் வைட்டமின் ஈ கொண்ட லிப்ஸ்டிக்கை பயன்படுத்தினால், உதடுகள் மென்மையாகக்கூடும்.

சருமத்தை போன்றே உதடுகளையும் சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க எஸ்.பி.எப்., கொண்ட லிப் பாம் பயன்படுத்தலாம்.

உதட்டை அடிக்கடி நாக்கால் தடவ கூடாது. புகைப்பழக்கத்தை கைவிடுதல், காலாவதியான லிப்ஸ்டிக்கை தவிர்த்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும்.

தோல் மருத்துவர்களிடம் கலந்தாலோசித்து பாதிப்புக்கேற்ப கிரீம்கள், கெமிக்கல் பீல்கள், லேசர் சிகிச்சை போன்றவற்றை முயற்சிக்கலாம்.