பசி எடுக்காததும் கேன்சர் அறிகுறியாக இருக்கலாம்

இந்தியாவில் கல்லீரல், கணையம் மற்றும் குடலைப் பாதிக்கும் புற்றுநோய்கள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

துரித உணவு, மதுபானம், புகையிலை பயன்பாடு அதிகரிப்பு மற்றும் பாரம்பரிய காய்கறி, நார்ச்சத்து உணவு குறைதல் போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாகும்.

கல்லீரல் பித்த உற்பத்தி, நச்சுக்களை வடிகட்டுதல் போன்ற, 500க்கும் மேற்பட்ட முக்கிய செயல்களை செய்கிறது.

கணையம், இன்சுலின் மற்றும் செரிமான நொதிகளை உற்பத்தி செய்கிறது. இந்த உறுப்புகளில் புற்றுநோய் பாதிப்பு ஆரம்பத்தில் கண்டறிவது அவசியம்.

பெரும்பாலான மக்கள் ஆரம்ப அறிகுறிகளை தவற விடுகின்றனர். அமைதியான எச்சரிக்கை என்பதால் தெரிவதில்லை.

பசியின்மை மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஓர் அறிகுறியாகும்.

நீண்ட நாள் வயிறு வீக்கம், காரணமில்லாத அதிக எடை இழப்பு, அடிக்கடி வயிறு வலி... இதுபோன்ற அறிகுறிகள் இருப்பின் அலட்சியம் கூடாது.

திடீர் நீரிழிவு, வெளிறிய அல்லது வெள்ளை மலம், மலத்தில் ரத்தம் போகுதல், மஞ்சள் காமாலை என்றால் டாக்டரை கட்டாயம் கலந்தாலோசிக்க வேண்டும்.