வயதானவர்களுக்கு கண்ணில் ஏற்படும் மாகுலர் சிதைவு பாதிப்பு!

பொதுவாக, 50 வயதை தாண்டியவர்களுக்கு வரும் பாதிப்பு மாகுலர் டிஜெனரேஷன். கண்ணின் மையப்பகுதியான மாகுலர் இதனால் பாதிக்கப்படும்.

கண் ஓரங்களில் பார்வை நன்றாக தெரியும். ஆனால் மையப்பகுதியில், மங்கலாகவோ அல்லது முற்றிலும் தெரியாமலோ போகலாம்.

நேரான கோடுகள் அலை அலையாக வளைந்திருப்பது போல தெரிவது, வாசிப்பதில் சிரமம் இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

இதில், உலர் வகை, ஈரமான வகை என இரண்டு வகை பாதிப்பு உள்ளது.

உலர் வகை பாதிப்பாக இருந்தால், மாகுலா பகுதி மெலிந்து, சிறிய மஞ்சள் நிற புள்ளிகள் தோன்றி, பார்வை குறையும். இதை குணப்படுத்த மருந்துகள் இல்லை.

ஈரமான வகை மாகுலா பாதிப்பு சற்று தீவிரமானது. விழித்திரையின் கீழ் அசாதாரணமாக ரத்த நாளங்கள் வளர்ந்து, பார்வை இழப்பை ஏற்படுத்தலாம்.

இதற்கு, ஊசி, லேசர், அறுவை சிகிச்சைகள் உள்ளன. இவ்விரு பாதிப்புகளிலும், சிகிச்சை எடுத்தால் இழந்த பார்வையை மீட்க முடியாது.

ஆனால், மேலும் பார்வை இழப்பு ஏற்படாமல் கட்டுப்படுத்தலாம். பார்வை மங்குவதாக உணர்ந்தால், உடனே கண் மருத்துவரை அணுகுவது அவசியம்.