டேஸ்டியான மலாய் சிக்கன் கிரேவி ரெசிபி இதோ
தேவையானப் பொருட்கள்: வறுத்த வெங்காயம் (பிரிஸ்தா) -1 கப், கரம் மசாலா தூள், கசகசா, பூண்டு விழுது - தலா 2 டீஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 துண்டு.
ப்ரெஷ் க்ரீம் தயிர் - 1 கப், நெய் - 5 டீஸ்பூன், முந்திரி - 50 கிராம், சிவப்பு மிளகாய், பாதாம் - தலா 10, முலாம்பழ விதைகள் - சிறிது, தேங்காய் - 1.
பட்டை - 2 துண்டு, ஏலக்காய் - 5, வெள்ளை மிளகுத் தூள் - சிறிது, சிக்கன் - 1 கிலோ, உப்பு - தேவையானளவு.
முலாம்பழ விதைகள், கசகசா, தேங்காய், பாதாம் மற்றும் முந்திரி ஆகியவற்றை ஒரு பேஸ்ட் போல் அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் காய்ந்த சிவப்பு மிளகாய், பிரிஞ்சி இலைகள், பட்டை, ஏலக்காய், உப்பு மற்றும் சிக்கனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
சிக்கனிலிருந்து தண்ணீர் பிரிந்து வற்றும் வரை வேக வைத்து, அதை தனியே எடுத்து வைக்கவும். கடாயில் சிறிது நெய் ஊற்றி, வறுத்த வெங்காயத்தை சேர்த்து 5 நிமிடங்கள் வேக விடவும்.
அதில், இஞ்சி பூண்டு விழுது, வெள்ளை மிளகு தூள் மற்றும் வேக வைத்த சிக்கன் அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
பின், அரைத்து வைத்த பேஸ்ட், கரம் மசாலா சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு, ப்ரஷ் கிரீம் தயிர் சேர்த்து கிரேவி நன்கு கெட்டியாகும் வரை 7 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
இப்போது ருசியான மலாய் சிக்கன் கிரேவி ரெடி. நெய் சாதம் மற்றும் ரொட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அள்ளும்.