வெயிலுக்கு இதமான மாம்பழ லஸ்ஸி

தேவையானப் பொருட்கள்: மாம்பழ துண்டுகள் - 2 கப், சர்க்கரை - 4 டீஸ்பூன், பால் - 1 கப், ஏலக்காய் பொடி - அரை டீஸ்பூன், உப்பு - 1 சிட்டிகை.

முந்திரிப்பருப்பு - 6, ஐஸ் கியூப் - சிறிதளவு, கெட்டியான தயிர் - 2 கப், டிரை ப்ரூட்ஸ் - ஒரு கைப்பிடி.

முதலில் மாம்பழத்தை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கவும்.

மாம்பழ துண்டுகளுடன், சர்க்கரை, கொதித்து ஆற வைத்த பால் சேர்த்து, மிக்சியில் மிருதுவாக அரைக்கவும்.

இதில் தயிர், பொடித்த முந்திரிப்பருப்பு, ஏலக்காய் பொடி, உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

லஸ்ஸியை கிண்ணத்தில் ஊற்றி, அதில் ஐஸ் கியூப்கள் போட்டால் சுவையான லஸ்ஸி ரெடி.

இதில் சில மாம்பழ துண்டுகள், டிரை ப்ரூட்ஸ் சேர்த்து அலங்கரித்தும் பரிமாறலாம். வெயிலுக்கு இதமாக இருக்கும்.

குழந்தைகளும், பெரியவர்களும் விரும்பி அருந்துவர். நன்கு பழுத்த மாம்பழத்தை பயன்படுத்தினால், சுவை அதிகமாக இருக்கும்.

இனிப்பு அதிகம் தேவையென்றால், கூடுதலாக சர்க்கரையை சேர்த்து கொள்ளலாம்.