இன்று உலக தண்ணீர் தினம்!
ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 22ம் தேதி, உலக தண்ணீர் தினமாக கொண்டாடப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபை சார்பில் 1993 முதல் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
நன்னீரின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், நிலத்தடி நீர் மேலாண்மை மற்றும் நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவது இதன் நோக்கமாகும்.
நடப்பாண்டுக்கான கருப்பொருள், ' தண்ணீர் மற்றும் பாலினம்' என்பதாகும்.
பூமியில் 70% நீர் இருந்தாலும், வெறும் 2.5% மட்டுமே நன்னீர், அதிலும் 1% மட்டுமே பயன்பாட்டிற்கு ஏற்றது. எனவே நீர் பாதுகாப்பு அவசியம்.
உலக தண்ணீர் நாள், நீரின் மதிப்பை வெறும் பொருளாதார ரீதியாக அல்லாமல், வாழ்வின் அடிப்படையாக நாம் உணர வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.
நாம் நீரின் ஒவ்வொரு துளியையும் போற்றிப் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே, நம் எதிர்கால சந்ததி நீர் தட்டுப்பாடு இன்றி வாழ வகை செய்ய முடியும்.