இன்று பூஜ்ஜிய கழிவு மேலாண்மை தினம்

பிளாஸ்டிக், மின்னணு உள்பட பல்வேறு பொருட்களின் கழிவுகளை முறையாக மேலாண்மை செய்யது மிகவும் அவசியம்.

இதை வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மார்ச் 30ல் உலக பூஜ்ஜிய கழிவு மேலாண்மை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உலகில் ஆண்டுக்கு 230 கோடி டன் திட கழிவு மனிதர்களால் உருவாக்கப்படுகிறது.

இதில் 55 சதவீதம் மட்டுமே முறையாக மேலாண்மை செய்யப்படுகிறது.

2050ல் இந்த எண்ணிக்கை 388 கோடி டன்னாக உயரும் என ஐ.நா., மதிப்பிட்டுள்ளது.

2040ல் ஆண்டுக்கு உணவு கழிவு 93 கோடி டன், பிளாஸ்டிக் கழிவு 3.7 கோடி டன் கடலில் கலக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இத்தினம், கழிவுகளைக் குறைத்து, சுத்தமான மற்றும் ஆரோக்கியமான பூமியை உருவாக்க அனைவரையும் வலியுறுத்துகிறது.

இந்த ஆண்டிற்கான கருப்பொரும் 'உணவுக்கழிவு' என்பதாகும். உணவுக்கழிவை குறைப்பதன் மூலம் உணவு தட்டுப்பாட்டைத் தடுக்கலாம் என கருதப்படுகிறது.