இன்று தேசிய தொழில்நுட்ப தினம்!
ஒவ்வோரு ஆண்டும் மே 11 அன்று தேசிய தொழில்நுட்ப தினத்தை இந்தியா கொண்டாடிவருகிறது.
இந்தியா 1998 மே 11, 13ல் ராஜஸ்தானின் பொக்ரானில் நடத்திய அணுகுண்டு சோதனைகள் வெற்றி பெற்றன.
ஆபரேஷன் சக்தியின் கீழ் மறைந்த டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தலைமையில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது.
இதனால் உலகின் அணு ஆயுத நாடுகளின் பட்டியலில் ஆறாவதாக இணைந்தது.
இச்சாதனையை அங்கீகரிக்கும் விதமாக மே 11ல் தேசிய தொழில்நுட்ப தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்நாளில் கண்டுபிடிப்பாளர்களுக்கும் தொழில்முனைவோருக்கும் அவர்களின் பங்களிப்புக்காக விருதுகளும் அங்கீகாரமும் வழங்கப்படுகின்றன.