இன்று இந்திய தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினம்
தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 21 ஆம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
1991 ஆம் ஆண்டு இதே நாளில்தான் இந்தியாவின் ஏழாவது பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகத்தில் பயங்கரவாத அமைப்பால் படுகொலை செய்யப்பட்டார்.
அவர் படுகொலை செய்யப்பட்ட தினமான மே 21, ஆண்டுதோறும் இந்திய தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படை வீரர்களின் தியாகத்தை போற்றும் ஒரு சந்தர்ப்பமாக இந்த நாள் அமைகிறது.
மக்களிடையே ஒற்றுமையையும் தேசியப் பெருமையையும் வளர்க்க பல அரசு மற்றும் சமூக அமைப்புகள் இந்நாளில் நிகழ்ச்சிகளைத் திட்டமிடுகின்றன.
அனைத்து சக மனிதர்களிடையேயும் புரிந்துகொண்டு, மனித உயிர்களையும் மதிப்புகளையும் அச்சுறுத்தும் இடையூறு சக்திகளை எதிர்த்துப் போராட வேண்டும்.