இன்று உலக சகோதரர்கள் தினம்
சகோதரர்களுக்குள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக மே 24ல் உலக சகோதரர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த தினம் முதன்முதலில் அமெரிக்காவில் உள்ள அலபாமாவைச் சேர்ந்த 'சி. டேனியல் ரோட்ஸ்' என்பவரால் 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
2005ல் அமெரிக்காவில் இத்தினம் தொடங்கப்பட்டாலும் பல்வேறு நாடுகளிலும் கடைபிடிக்கப்படுகிறது.
சகோதரர்களுக்குள் சண்டைகள், மனக்கசப்பு இருந்தாலும், உடன்பிறந்தவருக்கு ஒரு பிரச்னை என வந்துவிட்டால் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பர்.
வட இந்தியாவில் பழங்காலம் தொட்டே ரக்ஷா பந்தன் எனப்படும் சகோதரர்-சகோதரி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
சிலருக்கு உடன் பிறந்த சகோதரர்கள் இல்லையென்றாலும், உறவினர், நண்பர்களிடம் இருந்து சிலர் சகோதரர்கள் போல இருப்பார்கள்.
உங்கள் சகோதரர்களுடன் பேசி, ஒன்றாக உணவருந்தி, பிடித்த இடங்களுக்குச் சென்று மகிழுங்கள் மேலும் அவர்களுக்குப் பிடித்தமான பரிசுகளை அளிக்கலாம்.