இன்று உலக தைராய்டு தினம்

தைராய்டு ஒரு சிறிய சுரப்பி. வண்ணத்துப்பூச்சி வடிவில் கழுத்தின் கீழ்ப்பகுதி மையத்தில் அமைந்திருக்கும்.

உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்களை கட்டுப்படுத்துகிறது.

இதன் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மே 25ல் உலக தைராய்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

கழுத்தை, 'அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்' செய்தால், தைராய்டு முடிச்சுகள், நீர்க்கட்டிகள், சுரப்பியின் வீக்கத்தை கண்டறியலாம்.

'ப்ரீ டி3, ப்ரீ டி4' பரிசோதனை வாயிலாக, ரத்தத்தில் உள்ள தைராய்டு ஹார்மோன் அளவுகளை கண்டறியலாம்.

ஹார்மோன் உற்பத்தியை குறைக்கும் மருந்துகள், கதிரியக்க அயோடின் சிகிச்சை, சிலருக்கு அறுவை சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தலாம்.

அயோடின் கலந்த உப்பை உபயோகிப்பது, அயோடின், செலினியம், துத்தநாகம் நிறைந்த சத்தான உணவை சாப்பிடுவது அவசியம்.

மேலும் மன அழுத்தம் இல்லாமல் இருப்பது, போதுமான அளவு துாக்கம் ஆகியவை அவசியம். டாக்டரின் ஆலோசனையின்றி தைராய்டு மருந்துகளை சாப்பிடக்கூடாது.