மல்லிகை பூவின் மருத்துவ நன்மைகள்
வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லை அதிகமாக இருக்கும்.
இதற்கு, நான்கு மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.
மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி காகிதம் போலானவுடன், அரைத்து பொடியாக்கவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் இந்த பூக்கள் ஒன்றிரண்டை உட்கொண்டு வர, நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிக்கும்.
தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி, அதனை நெற்றியில் பத்திடுவது போல தேய்த்து விட்டால் தலைவலி காணாமல் போகும்.
அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.
மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், உங்களுக்குப் பிடித்த அளவிற்கு பூவை வாங்கி தலையில் சூடினால் போதும்; நிவாரணம் கிடைக்கும்.