பசியின்மையை தவிர்க்க என்ன செய்யலாம்?

வயிறு மற்றும் குடலின் ஆரோக்கியம் நம் ஆயுளை அதிகரிக்கிறது.

இளம் வயது மாரடைப்பு, வாதம் வருவதற்கும் ஆயுள் குறைவதற்கும் உணவு முறை தான் முக்கிய காரணம்.

பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும்.

சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க கூடாது. மதியம் சாப்பிட்ட பின் துாங்கக்கூடாது. முடிந்தளவு இரவு 9:00 மணிக்கு முன் துாங்க வேண்டும்.

சாப்பிடுவதற்கும், துாங்குவதற்கும் இரண்டு மணி நேர இடைவெளி இருக்க வேண்டும். டீ, காபி, பால் அருந்தக்கூடாது.

காலை எழுந்தவுடன் ஒரு டம்ளர் சுடுநீர் அருந்த வேண்டும். நேரம் பார்த்து சாப்பிடும் பழக்கத்தை கைவிட வேண்டும்.

உணவுகளை முறைப்படுத்தி உண்பதால் உடல் சோர்வு, உடம்பு வலி, பசியின்மை, துாக்கமின்மை, வயிறு தொடர்பான பிரச்னைகளை தவிர்க்கலாம்.