சாரதாதேவியாரின் கனிவான சிந்தனைகள்...
மனதிற்குச் சரி என்று தோன்றியதை துணிவுடன் செயல்படுத்துங்கள். உலகத்தைப் பற்றிய கவலை வேண்டாம்.
மனதில் குற்றம் இருப்பதாலேயே மனிதன் துன்பத்திற்கு ஆளாகிறான்.
சரியான சமயத்தில் எச்சரித்து நம்மை நல்வழிப்படுத்துபவனே நண்பன்.
எந்த இடத்தில் இருந்தாலும் மகிழ்ச்சியை இழந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
சோம்பலுக்கு இடம் அளிக்காதீர்கள். எப்போதும் சுறுசுறுப்புடன் கடமையாற்றுங்கள்.
பொறுமைக்கு சமமான பண்பு இவ்வுலகில் வேறில்லை.
மற்றவர் மகிழ்ச்சியில் தான் நம் மகிழ்ச்சி அடங்கியுள்ளது.