ஆனந்த யாழை மீட்டுவோம்! இன்று தேசிய மகள்கள் தினம்...

பெண் குழந்தை என்பது ஒரு குடும்பத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்றுதான் சொல்ல வேண்டும்.

பல நாடுகளில் பெண் குழந்தைகளை சுமையாக தான் பார்க்கிறார்கள். ஆண் குழந்தைக்கு கொடுக்கப்படும் சம உரிமை பெண் குழந்தைக்கு கிடைப்பதில்லை.

ஆண் - பெண் சம உரிமையை நிலை நாட்டும் வகையில், சில நாடுகளின் அரசுகள் மகள்கள் தினத்தை முன்னெடுத்துள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் மகள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. உலக அளவில் 28-ம் தேதியும் இது கொண்டாடப்படுகிறது.

உலக மகள்கள் தினம் அன்று வீட்டில் இருக்கக்கூடிய பெற்றோர்கள் தங்களுடைய மகளுக்கு பரிசு பொருள்களை வழங்கி நாளினை சிறப்பிக்கிறார்கள்.

அனைத்துத் துறைகளிலும் பெண்கள் ஆளுமை செலுத்திவரும் இந்தக் காலத்தில், பெண்சிசுக்கொலை, பாலியல் வன்கொடுமை, குழந்தைத் திருமணம் போன்ற கொடுமைகளும் நடக்கின்றன.

அம்மாவாக, காதலியாக, தோழியாக, மனைவியாக அன்பைப் பொழிகிறார்கள்.

பெண்களுக்கு எதிரான தீங்குகள் ஒழியட்டும், பெண்களின் பெருமையை இவ்வுலகம் என்றென்றும் போற்றட்டும்.