முகலாய பேரரசின் 'மிரர் ஆஃப் பாரடைஸ்' வைர மோதிரத்தில் ஜொலித்த நீதா அம்பானி
சமீபத்தில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முந்தைய ப்ரீ வெட்டிங் நிகழ்வு கோலாகலமாக நடந்தது.
அதில், மணமகளுக்கு இணையாக நீதா அம்பானி எம்ரால்டு, வைர ஆபரணங்களை அணிந்து ஜொலித்தார்.
குறிப்பாக, முன்பு முகலாயப் பேரரசின் நகை சேகரிப்பில் இருந்த 'மிரர் ஆஃப் பாரடைஸ்' வைர மோதிரத்தை நீதா அணிந்திருந்தார்.
இந்த வைர மோதிரம் கோல்கொண்டா வைரச் சுரங்கத்திலிருந்த வைரத்தால் வடிவமைக்கப்பட்டிருந்தது; ஒரு காலத்தில் முகலாயப் பேரரசின் நகை சேகரிப்பின் ஒரு பகுதியாகவும் இருந்தது.
அறிக்கையின் படி, 2019ம் ஆண்டில், இந்த அரிய மோதிரம் ரூ. 54 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.
தோராயமாக 52.58 காரட் எடை கொண்ட இந்த வைரமானது 1800 - 1899 காலகட்டத்தில் இந்தியாவின் கோல்கொண்டா சுரங்கங்களில் இருந்து பெறப்பட்டுள்ளது.
கடந்தாண்டில் நடந்த நீதா மற்றும் முகேஷ் அம்பானி கலாச்சார மையம் திறப்பு விழாவில், முதல் முறையாக மோதிரத்தை அவர் அணிந்திருந்தார்.
இந்த மோதிரம், நீதா அம்பானியின் நேர்த்தியான நகை தேர்வு, ஃபேஷன் திறனை வெளிப்படுத்துகிறது.
அதேப்போல், ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியிலும் நீதா அணிந்திருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகள், அவற்றின் அழகு, கைவினைத்திறனுக்காக பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.