முடியாதது எதுவுமில்லை... நெல்சன் மண்டேலாவின் தன்னம்பிக்கையூட்டும் வரிகள்

தென்னாப்ரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவை சிறப்பிக்கும் விதமாக அவரது பிறந்த தினம் (1918, ஜூலை 18), உலக நெல்சன் மண்டேலா தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

இந்நாளில் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் அவரின் தன்னம்பிக்கையூட்டும் வரிகள் சில...

துணிச்சலான மனிதன் என்பவன் பயப்படாதவன் அல்ல.. அந்த பயத்தை வெல்பவன்.

என் வெற்றிகளை வைத்து என்னை மதிப்பிடாதீர்கள். நான் எத்தனை முறை கீழே விழுந்து மீண்டும் எழுந்தேன் என்பதை வைத்து என்னை மதிப்பிடுங்கள்.

முடியாதது எதுவுமில்லை... செய்து முடிக்கும் வரை மட்டுமே அது சாத்தியமற்றதாகவே தோன்றும்.

ஒரு மனிதனுடன் அவரால் புரிந்துக்கொள்ளும் மொழியில் பேசினால், அது அவருடைய தலைக்குச் செல்லும். அவரின் மொழியில் பேசினால், அது இதயத்துக்கு செல்லும்.

வாழ்க்கையில் முக்கியமானது நாம் வாழ்ந்தோம் என்பதல்ல. மற்றவர்களின் வாழ்க்கையில் என்ன மாற்றங்களைச் செய்துள்ளோம் என்பதே நம் வாழ்க்கையின் முக்கியத்துவத்தைத் தீர்மானிக்கும்.

பின்னால் இருந்து வழிநடத்துங்கள்; மற்றவர்கள் தாங்கள் முன்னால் இருப்பதாக நம்பட்டும்.

நாம் நேரத்தை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த வேண்டும், சரியானதைச் செய்ய நேரம் எப்போதும் பழுத்திருக்கிறது என்பதை எப்போதும் உணர வேண்டும்.

மனக்கசப்பு என்பது விஷம் குடிப்பது போன்றது, அது உங்கள் எதிரிகளைக் கொன்றுவிடும் என்று நம்புவது.