இன்று சர்வதேச ஆண்கள் தினம்!

குடும்பத்துக்காக உழைக்கும் ஆண்களின் தியாகத்தை பாராட்டுதல், அவர்களுக்கான உரிமைகளை வழங்க வலியுறுத்தியும் நவ. 19ல் உலக ஆண்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

தந்தையின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் 1999ல் வெஸ்ட் இண்டீஸ் வரலாற்றுப் பேராசிரியரான ஜெரோம் டீலக்சிங் இத்தினத்தை உருவாக்கினார்.

ஆண்களின் நல்வாழ்வு, ஆரோக்கியம், பாலியல் சார்ந்த போராட்டங்கள் மற்றும் ஆவர்கள் சமூகத்தில் முக்கியமான பங்கைக் கொண்டுள்ளனர் என்பதை அங்கீகரிக்க இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

ஆண்களின் உரிமைகள் மற்றும பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருதியும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

தன் குடும்பத்தை தொடர் கடின உழைப்பால் தூக்கி நிறுத்த நினைக்கும் அத்தனை ஆண்களுக்கும் இத்தினம் சமர்ப்பணம்.

2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஆண்கள் தினத்தின் மையக்கருத்து “நேர்மறையான ஆண் முன்மாதிரிகள்”.