இன்று உலக மீனவர்கள் தினம்!

உலக நாடுகளில், பாரம்பரிய பழங்குடி மக்களாக மீனவர்கள் விளங்குகின்றனர்.

வாழ்வாதார தொழிலாக, கடல், ஆறு, ஏரி ஆகியவற்றில் மீன் பிடித்து, விற்பனை செய்கின்றனர்.

இவர்களின் பாரம்பரியம், மேன்மை கருதி, உலக மீனவர் தினம், நவ., 21ல் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலக மக்களுக்கு தேவையான உணவுப் புரதத்தில் 25 சதவீதத்துக்கும் அதிகமான அளவு மீன்களில் இருந்து கிடைக்கிறது.

இந்தியாவை பொறுத்தவரை 7,516 கிலோமீட்டர்கள் கடல் கடற்கரையும், 3,827 மீனவ கிராமங்களும், 1,914 பாரம்பரிய மீன் இறங்கு நிலையங்கள் உண்டு.

கடல் எல்லையில் நடக்கும் மீனவர்களின் பிரச்னைகளை உலகின் கவனத்திற்கு கொண்டு செல்ல இத்தினம் உதவும்.