இன்று தேசிய பால் தினம்
ஆண்டுதோறும் நவ.26ம் தேதி தேசிய பால் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
பால் மற்றும் பால் பொருட்களுக்கான வளர்ச்சிக்கு அடித்தளம் இட்ட டாக்டர் வர்கீஸ் குரியனை கவுரவிக்கும் வகையில், இந்தியாவில் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
இவர் 'வெண்மைப் புரட்சி' யின் தந்தை என போற்றப்பட்டார். பால் வளத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக இந்திய அரசு பல விருதுகளை வழங்கி அவரை கவுரவித்தது.
உலக அளவில் அதிக பால் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவுக்கும் ஓர் இடம் உண்டு.
பாலில் 'கேசின்' எனும் புரதச்சத்து 83 சதவீதம் இருக்கிறது. இந்த புரதம், 'குரோத்' எனும் நோய்க்கு சிறந்த மருந்து. பசு நெய் கண் பார்வை மேம்பட செய்கிறது.
பாலில் உள்ள 'பி 12' வைட்டமின் நரம்பு மண்டலம் சீராக இயங்க உதவுகிறது.
பாலில் சோடியம் உப்புச்சத்து குறைந்த அளவே இருப்பதால் இதயம் சம்பந்தமான நோய் தடுக்கப்படுகிறது.
பாலில் 'கொலின்' என்ற பொருள் இருப்பதால், அதனை குடித்ததும் நல்ல துாக்கம் வரும்.
பாலில் இருந்து கிடைக்கும் நெய், பெண்களுக்கு மார்பக புற்றுநோய், ஆண்களுக்கு குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.