இன்று குருநானக் ஜெயந்தி...

அறம் என்னும் நீரில் நீராடி, வாய்மை என்ற வாசனைத் திரவியத்தை பூசிக் கொள்ளுங்கள். அப்போது உங்கள் முகம் பேரொளியால் பிரகாசம் பெற்று விளங்கும்.

ஒவ்வொருவரும் இறைவனின் பெயரை உச்சரிக்கவே செய்கிறார்கள். ஆனால் மனத்தூய்மை இல்லாமல் உச்சரிப்பதால் மட்டும் இறைவனை அடைய இயலாது.

சாம்ராஜ்யம், செல்வம், அழகு, பெருமை, இளமை இவை ஐந்தும் உயிர் இறை ஞானம் பெற விடமால் தடுக்கும் திருடர்கள் ஆவர்.

உலகத்தின் செல்வம் முழுவதையும் செலவழித்தாலும் திருப்தியை விலைக்கு வாங்க முடியாது.

நம் மனம் மதம் பிடித்த யானையைப் போன்றது. பந்த பாசங்களினாலும், மரண பயத்தினாலும் உயிர் அலைந்து திரிகிறது. இதிலிருந்து விடுபட இறையருள் ஒன்றே நமக்குத் துணை செய்யும்.

உண்மையோடும், அன்போடும் வாழ்வது தான் ஆன்மிக வாழ்வின் ரகசியம்.

பொறுமையிலும் சிறந்த தவம் இல்லை. திருப்தியிலும் சிறந்த இன்பம் வேறில்லை.

ஆசையிலும் பெரிய தீமை இல்லை. கருணையிலும் சிறந்த அறம் கிடையாது.