ஊட்டச்சத்தை அள்ளித்தரும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சப்பாத்தி
தேவையானப் பொருட்கள்: சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 3, கோதுமை மாவு - 2 கப், உப்பு - தேவையான அளவு.
வேக வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்குகளின் தோலை உறித்து, பாத்திரத்தில் போட்டு கட்டிகள் இல்லாமல் மசிக்கவும்.
இதில், கோதுமை மாவு, உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசையவும். கிழங்கிலேயே ஈரத்தன்மை இருப்பதால், தண்ணீர் தேவைப்படாது.
மாவை நன்றாக பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி கல்லில் வட்டமாக தட்டவும். அடுப்பில் தோசைக்கல் வைத்து, சூடானவுடன் சப்பாத்தியை போடவும்.
சுற்றிலும் எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேக வைத்தால், சுவையான சப்பாத்தி இப்போது ரெடி.
தேங்காய் சட்னி, குருமா அல்லது தயிர் பச்சடியை தொட்டு சாப்பிட, சுவை அள்ளும்.
பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை, அனைவரும் விரும்பி சாப்பிடுவர். காலை டிபனுக்கு மட்டுமின்றி, மதிய உணவுக்கும் கொடுத்து அனுப்பலாம்.