சத்துகள் நிறைந்த தேங்காய் சோளம் ரெசிபி
தேவையான பொருட்கள்: மக்காசோளம் - 1 கப், காய்ந்த மிளகாய் - 1, மிளகு - 8
துருவிய தேங்காய், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்துாள் - தேவையான அளவு, உப்பு, எண்ணெய், தண்ணீர், கறிவேப்பிலை - சிறிதளவு.
மக்காசோளத்தை சிறிது உப்பு சேர்த்து தனியே வேக வைத்து எடுக்கவும்.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடானவுடன், கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காய துாள் போட்டு தாளிக்கவும்.
அதில், வேக வைத்த மக்காசோளம், பொடித்த மிளகு, துருவிய தேங்காய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்
இப்போது சுவையான, தேங்காய் சோளம் ரெடி. சத்துகள் நிறைந்தது; மாலை நேர உணவாக பயன்படுத்தலாம்.