குக்கீஸ்களால் உண்டாகும் அபாயம்

சுத்திகரிக்கப்பட்ட மாவு, சர்க்கரையில் தயாரிக்கப்பட்ட 'குக்கீஸ், பிஸ்கட், கேக்' மற்றும் அதிகளவில் உப்பு, மசாலா சேர்த்து வறுத்த பருப்பு வகைகள் தான் சூப்பர் மார்க்கெட்டில் அதிகளவில் விற்பனையாகின்றன.

அதிலும் அனைத்து வகை சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகளில் விதவிதமான குக்கீஸ் விற்பனைக்கு வந்துவிட்டன.

யார் வேண்டுமானாலும் வாங்கி சாப்பிடும் அளவிற்கு மலிவான விலையில் இவை கிடைக்கின்றன.

தினசரி தவறாமல் குக்கீஸ் சாப்பிடுபவர்களை ஆய்வுக்கு தேர்ந்தெடுத்து கண்காணித்ததில், அவர்களுக்கு கேன்சர் பாதிப்புக்கு வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.

குக்கீஸ், பிஸ்கட், கேக் சாப்பிடுவது, பலவிதமான கேன்சர் வரும் வாய்ப்பை குறிப்பாக மூளை, கருக்குழாய் கேன்சர் வரும் அபாயத்தை அதிகரிக்கிறது.

குறிப்பாக மார்பக கேன்சரால் இறக்கும் வாய்ப்பு 30 சதவீதம் அதிகமாக உள்ளது.