சத்தான கம்பு மாவு சாக்கோ சிப்ஸ் பிஸ்கட் ரெசிபி...

கம்பு மாவு - ஒரு கப், கோதுமை மாவு -1/4 கப், வெண்ணெய் -1/4 கப், நாட்டு சர்க்கரை- அரை கப்

பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன், பேக்கிங் சோடா 1/4 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, சாக்கோ சிப்ஸ் - தேவையான அளவு

செய்முறை: கம்பு மாவு, கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு எல்லாம் சேர்த்து சலித்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், சலித்து வைத்துள்ள மாவு, சர்க்கரை சேர்த்து நன்கு பிசையவும்.

அத்துடன் சாக்கோ சிப்ஸ் சேர்த்து பிசைந்து பிரிட்ஜில் அரைமணி நேரம் வைக்கவும்.

பின்னர் மாவை எடுத்து உருட்டி, விரும்பிய வடிவங்களில் அழுத்தி பேக்கிங் ஷீட்டில் வைக்கவும்.

பின்னர், 180 டிகிரியில் பத்து நிமிடங்கள், பிரீ ஹீட் செய்து, 12 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

இப்போது, சுவையான, சத்தான கம்பு மாவு சாக்கோ சிப்ஸ் பிஸ்கட் தயார்.